/* */

குறைவான ஓட்டுப்பதிவு நடந்த பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்..!

குமாரபாளையம் பகுதியில் தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர்.

HIGHLIGHTS

குறைவான ஓட்டுப்பதிவு நடந்த பகுதிகளில்   விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்..!
X

குமாரபாளையம் நகராட்சியில் குறைவான ஓட்டுப்பதிவு நடந்த பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

குறைவான ஓட்டுப்பதிவு நடந்த பகுதிகளில் கூடுதல் வாக்குப்பதிவு நடப்பதற்காக அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

குமாரபாளையம் பகுதியில் தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். குமாரபாளையம் நகராட்சியில் குறைவான ஓட்டுப்பதிவு நடந்த பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் முருகன், ரெட் கிராஸ் செயலர் ராஜேஷ்கண்ணன், தாசில்தார் சண்முகவேல் உள்பட பலர் பங்கேற்று, வீடு வீடாக சென்று, 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டி, துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்தனர்.

இதன் விழிப்புணர்வு பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கியது. குறைவான ஓட்டுப்பதிவு நடந்த பகுதிகளில் நடந்த இந்த பேரணி, மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. வழி நெடுக 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தவாறு சென்றனர். வருவாய்த்துறையினர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்திட வேண்டும், ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி குமாரபாளையம் நகராட்சி முன்பு துவங்கியது., தாசில்தார் சண்முகவேல் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் குமரன் கொடியைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

மகளிர் திட்ட இயக்குனர் செல்வராஜ், தேர்தல் பார்வையாளர் ராஜேஷ் கண்ணன் பங்கேற்று, விழிப்புணர்வு கருத்துகள் கூறி, வாழ்த்தி பேசினார்கள். கலைமகள் வீதி, சேலம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக சென்ற பேரணி, பஸ் ஸ்டாண்ட் வளாகம், அம்மா உணவகம் முன்பு நிறைவு பெற்றது. அங்கு வைக்கபட்ட போர்டில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தி அனைவரும் கையொப்பமிட்டனர்.

இதில் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று, தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் கைகளில் ஏந்தியபடியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தபடியும், கோஷங்கள் போட்டபடியும் பங்கேற்றனர். நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கல்லூரி முதல்வர் விஜயகுமார், மகளிரணியினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 6 April 2024 12:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு