/* */

பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்

குமாரபாளையத்தில் பூசணி காய்களை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
X

குமாரபாளையத்தில் பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

இன்று ஆயுத பூஜை விழா தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை என்பது சாதி, மதம், இனம்,மொழி இவற்றிற்கு அப்பாற்பட்டு உழைக்கும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு உன்னத திருவிழா ஆகும். குறிப்பிட்ட மதத்திற்கு சொந்தமானது அல்ல. ஆயுத பூஜை தினத்தன்று பள்ளி கல்லூரிகளில் கல்வி பணி சிறப்பாக நடைபெற வேண்டும் என பூஜை செய்வது வழக்கம். அதேபோல் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய பயன்படும் எந்திரங்கள் மற்றும் கருவிகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதற்காக பூஜை நடத்தப்படுவது உண்டு.

இது தவிர மெக்கானிக் பட்டறைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என எல்லா இடத்திலும் உருவமே இல்லாத ஒரு கடவுளுக்கு பூஜைகள் நடத்தி சுண்டல், பொங்கல், அவல், மற்றும் பழங்கள் உணவு பண்டங்களை வைத்து இறைவனுக்கு படைத்து மகிழ்கிறார்கள். அதோடு வாழைமரம், தோரணம் என கட்டி இறுதியாக பூஜை முடிந்த பின்னர் கடையோ நிறுவனமோ தொழிற்சாலையோ வளாகம் முழுவதும் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு இறுதியாக பூசணிக்காயில் வைக்கப்படும் கற்பூரத்தை நடுரோட்டில் போட்டு உடைப்பது வழக்கம்.

இப்படி உடைக்கப்படும் பூசணிக்காய் நடுரோட்டில் அப்படியே சிதறி கிடக்கும்.அவற்றின் மீது ஏறும் இருசக்கர வாகனங்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. இப்படி விபத்தில் சிக்குபவர்களுக்கு சில நேரங்களில் உயிரிழப்பை கூட ஏற்படுத்தி விடுவது உண்டு. இது போன்ற சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்களும் அப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குமாரபாளையத்தில் பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் மற்றும் போலீசார் சார்பில் பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அமைப்பாளர் விடியல் பிரகாஷ் தலைமை வகிக்க, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் எஸ்.ஐ. மலர்விழி துண்டு பிரசுரங்களை கடைகளில் கொடுத்து துவக்கி வைத்தனர். பள்ளிபாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை, காவேரி நகர் உள்ளிட்ட நகரின் பல இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் பல்லாயிரக்கனக்கான வியாபார நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் உள்ளன. இந்த பல்லாயிரக்கனக்கான நிறுவனங்களில், நிறுவனத்திற்கு ஒன்று என்று எடுத்துக்கொண்டாலும் பல்லாயிரக்கனக்கான பூசணிகள் சாலைகளில் போட்டு உடைப்பதை ஆண்டுதோறும் வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இதனால் வாகன ஓட்டிகள் இந்த பூசணிகள் மீது விட்டு, கீழே விழுந்து, உயிரிழப்பு, உடல் உறுப்புகள் இழப்பு எனும் வகையில் பாதிக்கபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இவற்றை தடுக்க பல வழிகளில் முயற்சிகள் எடுத்தாலும் போலீசார் உள்ளிட்ட நகராட்சி நிர்வாகத்தினரால் கூட கட்டுப்படுத்த முடியாத நிலையே ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஒவ்வொருவரும் தாமாக உணர்ந்து பூசணியை சாலையில் உடைப்பதை தவிர்க்க வேண்டும் என அப்போது பிரச்சாரம் செய்யப்பட்டது.

Updated On: 4 Oct 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?