குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
X

குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் சைல்டு லைன் அலுவலர் சவுடேஸ்வரி பேசினார்.

குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி, மண்டல வாரியாக அரசு பள்ளிகளில் சைல்டு லைன், போலீஸ், சமூக நலத்துறை, சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் உதவி தலைமை ஆசிரியைகள் தமிழி, சாரதா தலைமை வகித்தனர். சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த அலுவலர் சவுடேஸ்வரி பங்கேற்று விழிப்புணர்வு கருத்துக்கள் குறித்து பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், பெண்கள் பாதுகாப்பிற்கு போலீஸ் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட செயலியை பயன்படுத்தி ஆபத்தான நேரங்களில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். வளர் இளம் பருவத்தில் வாலிபர்களின் வார்த்தையை நம்பி ஏமாற கூடாது. உடல் நலனில் மிகுந்த அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!