குமாரபாளையம் அருகே வயதுவந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

குமாரபாளையம் அருகே வயதுவந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

குமாரபாளையம் வட்டார வள மையம், பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி.

குமாரபாளையம் அருகே வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் சமுதாய விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயணம் பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெப்படை அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் கிராமப்பகுதிகளில் நடைபெற்றது.

தலைமையாசிரியர்கள் காந்திரூபி, பாஸ்கரன் தலைமை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் வளர்மதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் மல்லிகேஸ்வரி கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இது குறித்து மல்லிகேஸ்வரி கூறுகையில், 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் வயது வரம்பின்றி அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு சார்பில் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இது பற்றிய விழிப்புணர்வு மற்றும் பெண் கல்வி முக்கியத்துவம் குறித்து கலை நிகழ்சிகள் மூலம் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

இதில் தருமபுரி கலை நிலா கலைக்குழுவினர், நிர்வாகிகள் சிவகாமி, கவிதா, சிவராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!