சேவை மகளிருக்கு விருதுகள் வழங்கும் விழா

சேவை மகளிருக்கு விருதுகள்   வழங்கும் விழா
X
சேவை செய்யும் மகளிர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தது.

சேவை மகளிருக்கு விருதுகள்

வழங்கும் விழா


சேவை செய்யும் மகளிர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தது.

சேவை செய்யும் மகளிர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆதவன் உலக செம்மொழி தமிழ்சங்கம் மற்றும் கோல்டன் லோட்டஸ் பவுண்டேசன் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தது. நிறுவனர் சமேஸ்வரி குருவாயூரப்பன் தலைமை வகித்தார். ரத்த தேவைக்கு உதவுதல், உடல் உறுப்பு தானம் பெற வைத்தல், கண் தானம் செய்தல், ஆதார், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெறுதல், பெயர் திருத்தும் செய்ய உதவுதல், மருத்துவ காப்பீடு மூலம் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய உதவுதல்,வடிகால் பராமரிப்பு சாலை வசதி மேம்படுத்துதல், பேருந்துகள் இல்லாத பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுதல் என்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்து வரும் குமாரபாளையம் சமூக ஆர்வலர் சித்ரா, மல்லிகா, மதுரை உமையாள், மணிமேகலை, ஜோதி உள்பட பலருக்கு சேவையை பாராட்டி விருதுகள் வழங்கி, சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மேலும் சேலம் சிவகங்கை, கோயம்புத்தூர், திண்டுக்கல் உலக செம்மொழி தமிழ் சங்க தலைவி மெர்சி, சின்னத்திரை நடிகர்கள் பழனி, மற்றும் பூவையார் ஆகியோர் விருதுகள் வழங்கி பாராட்டி பேசினார்கள்.

படவிளக்கம் :

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த சேவை செய்யும் மகளிர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் குமாரபாளையம் சித்ராவுக்கு விருது வழங்கப்பட்டது.

Next Story