குமாரபாளையம் அம்மன் கோவில்களில் ஆவணி வெள்ளி சிறப்பு வழிபாடுகள்

குமாரபாளையம் அம்மன் கோவில்களில் ஆவணி வெள்ளி சிறப்பு வழிபாடுகள்
X

குமாரபாளையம் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

ஆவணி வெள்ளிக்கிழமையையொட்டி குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆவணி வெள்ளிக்கிழமையையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில் ஆகியவற்றில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

மேலும், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், களியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன், பவானி கூடுதுறை வேதநாயகி அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகளும் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!