அக்கா மகனுக்கு பெண்ணை கடத்த வந்த ஆத்தூர் தனியார் கல்லூரி பெண் முதல்வர்
குமாரபாளையம் காவல் நிலையம்.
ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் ஹேமந்த் கார்த்தி, (வயது 24). இவர் குமாரபாளையம் ஒட்டன்கோவில் பகுதியில் வசிக்கும் 22 வயது பட்டதாரி பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பெண் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹேமந்த்கார்த்தி, ஆத்தூரில் தனியார் கல்லூரி முதல்வராக பணியாற்றி வரும் தன் சித்தி செண்பகம் வசம் விபரத்தை கூறி,சேர்த்து வைக்க கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 02:30 மணியளவில் தனியார் கல்லூரி போலீரோ வாகனத்தில் முதல்வர் செண்பகம் மற்றும் ஹேமந்த் கார்த்தி இருவரும் வந்து, அந்த பெண்ணின் வீட்டின் கதவை தட்டினர். கதவை திறக்காததால் அதனை உடைக்க முயற்சித்துள்ளனர். வீட்டிலிருந்த அந்த பெண் மற்றும் அவரது அம்மா கதவை திறக்காமல், அரசியல் கட்சியின் முன்னாள் நகர செயலாளர் ஒருவருக்கு போன் செய்து நடக்கும் சம்பவத்தைக்கூறி, உதவிக்கு அழைத்துள்ளார்கள்.
இதனையடுத்து, அவர் போலீசிடம் தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் நேரில் சென்று இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் ஹேமந்த் கார்த்தியின் பெற்றோர் மற்றும் அந்த பெண்ணின் தாயார் ஆகியோரிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், இருவரையும் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்து சேர்த்து வைப்பதாக இரு தரப்பினரும் முடிவு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu