குமாரபாளையத்தில் ஏடிஎம் கொள்ளை முயற்சி: 3 பேரை கைது செய்த தனிப்படை

குமாரபாளையத்தில் ஏடிஎம் கொள்ளை முயற்சி: 3 பேரை கைது செய்த தனிப்படை
X

குமாரபாளையம் ஏ.டி.எம். மெசின் கொள்ளை முயர்ச்சி வழக்கில் தொடர்புடைய 3 பேரை சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். 

குமாரபாளையத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் தனிப்படை போலீசார் இன்று 3 பேரை கைது செய்தனர்.

சங்ககிரி பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி ஏ.டி.எம்.க்கு அக். 16ல் கொள்ளையடிக்க வந்த நபர்கள் கேமராவில் ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தனர். கேஸ் வெல்டிங் வைத்து கொள்ளை அடிக்க முயற்சித்தனர். அங்கிருந்த 15 லட்சத்து 70 ஆயிரம் திருடு போகாமல் இருந்தது குறித்து, வங்கி மேலாளர் ரித்திஷ்குமார் சங்ககிரி போலீசில் புகார் செய்தார்.

இந்த கொள்ளை வழக்கு சம்பந்தமாக சேலம் எஸ்.பி. அபினவ், சங்ககிரி டி.எஸ்.பி. நல்லசிவம், ஆகியோர் சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் தனிப்படை அமைத்தனர். நவ. 8ல் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் வாகன தணிக்கை செய்தபோது, ஈரோடு பக்கமிருந்து வந்த மாருதி ஸ்விட் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இருந்த பள்ளிபாளையத்தை சேர்ந்த பூபாலன், 24, ஜெகதீஸ், 26, ஆகியோர்களை விசாரிக்க இந்த வழக்கின் குற்றவாளிகள் என தெரியவந்தது.

காஸ் வெல்டிங் செய்து வரும் முகமதுரியாஸ், 19, என்பவரையும் போலீசார் பிடித்தனர். இவர்களிடம் விசாரணை செய்ததில் அக். 22ல் குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலையில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். ல் கொள்ளையடிக்க முயற்சித்ததும் இவர்கள்தான் என்பது தெரியவந்தது.

இவர்களிடமிருந்து ஸ்விப்ட் கார், கேஸ் வெல்டிங் கிட், ஸ்ப்ரே பெயின்ட், பறிமுதல் செய்யப்பட்டன. மூன்றுபேரும் கைது செய்யப்பட்டனர். இந்த கொள்ளை கும்பலை பிடித்த இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான தனிப்படையினர் மற்றும் இவர்களை பிடிக்க உறுதுணையாக இருந்த சேலம் சைபர் கிரைம் போலீஸ் சுரேஸ் ஆகியோரையும் மாவட்ட எஸ். பி., டி.எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!