குமாரபாளையம் அருகே அரசு பஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்: ஒருவர் கைது
பைல் படம்.
ஈரோடு மாவட்டம், பாசூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன், 51, அரசு பஸ் ஓட்டுநர். நேற்றுமுன்தினம் இரவு 9:15 மணியளவில் கே. 2 என்ற அரசு பேருந்து குமாரபாளையத்திலிருந்து பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
குப்பாண்டபாளையம் பஸ் நிறுத்தம் அருகே ஸ்கூட்டி டூவீலரில் வந்தவர் பஸ்ஸை நிறுத்தி, ஓட்டுநர் விஸ்வநாதனை தகாத வார்த்தையில் பேசி, முகத்தில் பலமாக தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பஸ் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.
இது குறித்து விஸ்வநாதன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் செய்த விசாரணையில், தாக்கியவர் குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்த கார் ஓட்டுநர் சுந்தரம், 53, என்பதும், சுந்தரத்தின் உறவுக்கார பெண் ஒருவர், கூட்டமாக இருந்ததால் பஸ்ஸில் ஏற முடியவில்லை என்பதால் சுந்தரம் இவ்வாறு நடந்து கொண்டதும் தெரியவந்தது. குமாரபாளையம் போலீசார் சுந்தரத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu