குமாரபாளையம் அரசு பள்ளியில் தடகள போட்டிகள்: 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

குமாரபாளையம் அரசு பள்ளியில் தடகள போட்டிகள்: 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
X

குமாரபாளையம் அரசு பள்ளியில் நடத்தப்பட்ட தடகள போட்டிகளுக்கு முன்பாக போலீஸ் எஸ்.ஐ. மலர்விழி ஒலிம்பிக் சுடர் ஏற்றிவைத்தார்.

குமாரபாளையம் அரசு பள்ளியில் தடகள போட்டிகள் நடைபெற்றன.

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரு பாலர் பங்கேற்கும் இரு நாட்கள் தடகள போட்டிகள் துவங்கியது. முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகிக்க, பெண்கள் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை சிவகாமி தேசியக்கொடியேற்றி வைத்தார்.

போலீஸ் எஸ்.ஐ. மலர்விழி அணிவகுப்பு மரியாதை ஏற்றதுடன், ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாளையும் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!