குமாரபாளையத்தில் மனநலம் பாதித்தவரை மீட்ட அட்சயம் பொதுநல அமைப்பினர்

X
By - K.S.Balakumaran, Reporter |27 Aug 2021 10:00 PM IST
குமாரபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அட்சயம் பொதுநல அமைப்பினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
குமாரபாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் செல்வகுமார்(,55.) மன நலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்.
இவரது பெற்றோர் இல்லாமை, திருமணம் ஆகாதது, உள்ளிட்ட பல காரணங்கள் இவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இவரை பற்றி இப்பகுதி மக்கள் அட்சயம் பொதுநல அமைப்பினரிடம் தகவல் தந்தனர்.
நேரில் வந்த நவீன்குமார் தலைமையிலான அட்சயம் அமைப்பினர் இவரை மீட்டனர். இவரை குளிக்க வைத்து, புதிய ஆடைகள் அணிவிக்க செய்து தேசிய சுகாதார பனியின் கீழ் இயங்கும் பெருந்துறையில் உள்ள அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தில் சேர்த்தனர். இதனை நேரில் கண்ட பொதுமக்கள் அட்சயம் அமைப்பினரை பாராட்டினர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu