குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை மீட்ட அட்சயம் அறக்கட்டளை

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை மீட்ட அட்சயம் அறக்கட்டளை
X

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற முதியவரை குளிக்க வைத்த அட்சயம் அறக்கட்டளையினர்.

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர்களை அட்சயம் அறக்கட்டளையினர் மீட்டு முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற முதியவர் மற்றும் மனநலம் பாதித்த பெண்மணி ஆகியோர் அட்சயம் அறக்கட்டளையின் மூலம் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து அட்சயம் அமைப்பாளர் நவீன்குமார் கூறுகையில், குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் அட்சயம் அறக்கட்டளையின் மூலம் ஆதரவற்று சுற்றித்திரியும் யாசகர்களை மீட்டெடுக்கும் களப்பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில் 50ற்கும் மேற்பட்ட யாசகர்களின் விவரங்கள் மற்றும் குறைகள் சேகரிக்கப்பட்டது. பின் அதில் ஒருவரான கண்மங்கலாக தெரியும் பெருமாள் வயது 70 மற்றும் சாந்தி வயது 45 (மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி) என்ற ஆதரவற்ற இரண்டு நபர்களை மீட்டு, குளிக்க வைத்து, புத்தாடைகள் அணிவித்து, காவல்துறையின் அனுமதியுடன் திண்டுக்கல்லில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் பெருந்துறையில் உள்ள ECRC மனநல காப்பகத்தில் சேர்த்து மறு வாழ்க்கை வழங்கினோம் என தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!