குமாரபாளையம் சவுண்டம்மன் திருவிழாவில் மகா ஜோதி திருவீதி உலா

குமாரபாளையம் சவுண்டம்மன் திருவிழாவில்  மகா ஜோதி திருவீதி உலா
X

குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் மகா ஜோதி வைபவத்தில் வீர குமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர்.

குமாரபாளையம் சவுண்டம்மன் திருவிழாவில் மகா ஜோதி திருவீதி உலா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் சேலம் சாலை, பழைய பேட்டை சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடுதல், காவேரி ஆற்றிலிருந்து சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு வைபவங்கள் நடைபெற்றன.

இதன் இறுதி வைபவமாக மகா ஜோதி திருவீதி உலா நடைபெற்றது. இந்த திருவீதி உலா, தம்மண்ணன் சாலை, அக்ரஹாரம், புத்தர் வீதி, சேலம் சாலை, கலைமகள் வீதி, திருவள்ளுவர் வீதி, வழியாக நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வைபவத்தை கண்டு ரசித்து அம்மனை வழிபட்டனர்.

அம்மன் சக்தி கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்பது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன.

Tags

Next Story