குமாரபாளையம் நகராட்சி துவக்க பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கொண்டாட்டம்

உலக எழுத்தறிவு தினம் குமாரபாளையம் அரசு பள்ளியில் கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சி.நா.பாளையம் நகராட்சி துவக்க பள்ளியில் தளிர்விடும் பாரதம் சமூக சேவை அமைப்பின் சார்பில், அமைப்பாளர் சீனிவாசன், தலைமை ஆசிரியை கற்பகம் தலைமையில் உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில்சீனிவாசன் பேசியதாவது:-
உலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப். 8 ம்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் உலக எழுத்தறிவு நாளாக 1966ல் பிரகடனம் செய்தது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கமாகும். யுனெஸ்கோவின் அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும், நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. மேலும் மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களுக்கு எழுத்தறிவு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் உச்சரிப்பை சரியாக பயன்படுத்தியவர்களுக்கும், வார்த்தைகளை எழுத்துப்பிழை இல்லாமல் எழுதிய மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களும், புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டது. சங்க செயலாளர் பிரபு, ஆசிரியைகள் ஸ்டெல்லா, நிர்மலா உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu