குமாரபாளையத்தில் இன்று ஜோதிடர் மாநாடு, குரு பெயர்ச்சி யாகம்
குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜோதிடர் மாநாட்டில் ஜோதிடர் ரமேஷ்குமார் பேசினார்.
குமாரபாளையத்தில் குரு பெயர்ச்சி யாகம் மற்றும் ஜோதிடர் மாநாடு ஜோதிடர் ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. குரு பெயர்ச்சி யாகத்தை குமாரபாளையம் ஜனார்த்தன சிவம், அரவிந்தசிவம் குழுவினர் நடத்தினர்.
ஜோதிடர் ரமேஷ்குமார் எழுதிய ஜாதக சந்திரிகா, ஜாதக முத்துமாலை, ஜாதக இரத்தினம், ஜாதக கோமேதகம், ஜாதக மரகதம், ஜாதக மோகனம் ஆகிய 6 புத்தகங்களை தொழிலதிபர் புருஷோத்தமன் வெளியிட, விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பின் நிறுவனர் பிரகாஷ் பெற்றுக்கொண்டார்.
பரிகார, அஷ்ட வர்க்க பலன், நவாம்சம், திருமணம், சந்திரநாடி, மருத்துவம், பங்கு சந்தை, திதி யோகா கரணம், முடக்கு ராசி, கிரக வக்கிர பலன், ஜாதக கதம்பம் என்ற தலைப்பிலான சூட்சுமங்கள் குறித்து மாநாட்டில் பங்கேற்ற ஜோதிடர்கள் பேசினார்கள். ஜோதிடர்கள் அனைவர்க்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu