குமாரபாளையம் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் ஆக பதவி ஏற்றுள்ள ராமகிருஷ்ணன்

குமாரபாளையம் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் ஆக   பதவி ஏற்றுள்ள ராமகிருஷ்ணன்
X

குமாரபாளையம் காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள ராமகிருஷ்ணன்.

குமாரபாளையம் காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டர் ஆக ராமகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளார்.

மாரபாளையத்தின் புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக ராமகிருஷ்ணன் பதவி ஏற்றார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த தவமணி தர்மபுரி மாவட்டம், தேன்கனிகோட்டைக்கு பணி மாறுதலில் சென்றார். இதனை தொடர்ந்து பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராமகிருஷ்ணன், குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டடார். ராமகிருஷ்ணன் இன்று குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக பதவி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவருக்கு எஸ்.ஐ.க்கள், எஸ்.எஸ்.ஐ.க்கள், ஏட்டுக்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

குமாரபாளையத்தில் போலீஸ் குடியிருப்பை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

குமாரபாளையம் போலீசாருக்கு காவலர் குடியிருப்பு கட்ட, பல இடங்களில் பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. இறுதியாக எஸ்.எஸ்.எம். பொறியியியல் கல்லூரி பின்புறம் அதற்கான இடம் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணி துவங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இதனை சில நாட்கள் முன்பு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் டி.ஜி.பி. விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இந்த கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. ஏ.டி.எஸ்.பி. கங்கேஸ்வரி தலைமை வகித்தார். இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ரூ.408.97 லட்சங்கள் மதிப்பில் குமாரபாளையத்தில் காவலர் குடியிருப்பு கட்டுமான பணி நிறைவு பெற்றதையடுத்து, 32 வீடுகளில், தரை தளம், மின் இணைப்பு பணிகள், குழாய்கள் அமைத்த பணிகள், குடிநீர் டேங்க்குகள் பொருத்திய பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் டி.ஜி.பி. விஸ்வநாதன் ஏற்கனவே ஆய்வு செய்தார். நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார். குடியிருப்பு பகுதி முழுதும் சுற்றி, சுற்றிசுவர் அமைக்க கட்டுமான ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
கடம்பூர் அருகே யானைகளுக்கு ராகி உணவு சமைத்து படையலிட்ட பழங்குடியின மக்கள்!