குமாரபாளையம் ஆசிரியர் காலனியில் வடிகால் அமைக்கும் பணி தீவிரம்...

குமாரபாளையம் ஆசிரியர் காலனியில் வடிகால் அமைக்கும் பணி தீவிரம்...
X

குமாரபாளையம் ஆசிரியர் காலனியில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குமாரபாளையத்தில் 35 ஆண்டு கோரிக்கையின் பலனாக ஆசிரியர் காலனியில் வடிகால் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எதிர்மேடு ஆசிரியர் காலனி பகுதியில் வடிகால் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கை குறித்து ஊராட்சி தலைவி புஷ்பா நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, ஆசிரியர் காலனி பகுதியில் வடிகால் அமைக்க அவர் ஏற்பாடு செய்தார். இதைத்தொடர்ந்து, தற்போது ஆசிரியர் காலனியில் வடிகால் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நடைபெற காரணமாக இருந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஊராட்சி தலைவி புஸ்பா உள்ளிட்டோருக்கு ஆசிரியர் காலனி பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொறியாளர்கள் கூறியதாவது:

பொதுவாக, மழைநீர் வடிகால்கள் 7 மீட்டர் மற்றும் அதற்குமேல் அகலம் உள்ள சாலைகளில் அமைக்கப்படுகின்றன. வடிகாலின் குறைந்த பட்ச அளவு 600×700 மில்லி மீட்டர் ஆகும். வடிகாலின் அளவு நீர்பிடிப்புப் பகுதி, நிலத்தின் அமைப்பு மற்றும் வெளியேறும் நீரின் அளவு ஆகியவைகளைப் பொறுத்து வடிவமைக்கப்படும்.

தண்ணீர் தேங்கும் பகுதிகளில், சாலையின் அகலம் எவ்வாறு இருந்தாலும், தண்ணீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில், மழைநீர் வடிகால்கள் வடிவமைக்கப்படுகின்றன. வடிகாலின் உயரம், சாலையின் மட்டத்தில் இருந்து 6 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்கும். வடிகாலின் மேற்புற தளத்தின் உயரமும் மனித நுழைவாயிலின் மூடியும் நடைபாதையின் மட்டத்திற்கு சமமாக இருக்க வேண்டும்.

சாலை குறுக்கில் அமைக்கப்படும் மழைநீர் வடிகாலின் மேற்புற தளத்தின் மட்டம் சாலையின் மட்டத்திற்கு சமமாக இருக்க வேண்டும். வடிகால்கள் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு 5 மீட்டர் இடைவெளியிலும் (SFRC/FRP) ஸ்டீல் பைபர் ரீ இன்போர்ஸ்ட் கான்கிரீட்/ பைபர் ரீஇன்போர்ஸ்ட் பாலிமர் ஆகியவைகளினால் செய்யப்பட்ட மனித நுழைவாயில் மூடிகள், சூட் பைப்கள், (மழைநீர் வழிந்தோடும் குழாய்) அமைக்கப்படுகின்றன. இது தவிர மழைநீரினை சேகரிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும், ஒவ்வொரு 30 மீட்டர் இடைவெளியிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப் படுகின்றன என பொறியாளர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!