குமாரபாளையம் அரசு கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

குமாரபாளையம் அரசு  கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
X

முன்னாள் மாணவர் சந்திப்பில் பங்கேற்றவர்கள். 

குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில், முன்னாள் மாணவர்களின் சந்தித்து, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் ஆண்டுதோறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், நேற்று முன்தினம் நடந்த இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:

முன்னாள் மாணவர்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். அதற்காக குடிமைப் பணிகளுக்கான தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் போன்றவற்றை எழுதி அரசு சார்ந்த வேலை வாய்ப்புகளில் சேர இடைவிடாமல் முயற்சியுடன் செயல்பட வேண்டும்.

தற்போது படிக்கும் மாணாக்கர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து, கலங்கரை விளக்காய் முன்னாள் மாணவர்கள் வழிகாட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் தாங்கள் படிக்கும் போது நடந்த சுவையான சம்பவங்கள், அனுபவங்கள் குறித்து பேசினார்கள். இதில் பேராசிரிய பெருமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story