குமாரபாளையத்தில் ஓவியர் சங்க ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் ஓவியர் சங்க ஆலோசனை கூட்டம்
X

ஓவியர் சங்க கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

குமாரபாளையத்தில் ஓவியர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், ஓவியர் சங்கம் சார்பில், அதன் செய்தி தொடர்பாளர் சுசிகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், டிசம்பர் 11 பாரதி பிறந்தநாளில் திரைப்பட நடிகரும், ஓவியருமான சாப்ளின் பாலு தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஓவியர் சங்க பெயர் பலகை திறந்து வைத்தல், மரக்கன்று நடுதல், சங்க கொடிக்கம்பம் நடுதல், தமிழ்நாடு தேர்தலில் நகர் புறங்களில் சுவர் விளம்பரம் எழுத அனுமதி வழங்க வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், தலைவர் கதிரவன், நிர்வாகிகள் சிங்காரவேல், பாஸ்கரன், குணசேகரன், ரவிச்சந்திரன்,மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கஞ்சா போதையில் வடமாநில இளைஞர் அராஜகம் – வடமாநில இளைஞர் மீது பொதுமக்கள் ஆத்திரம் - ஈரோட்டில் பரபரப்பு!