குமாரபாளையத்தில் எலும்பு மூட்டு இலவச பரிசோதனை முகாம்: டி.எஸ்.பி., பங்கேற்பு

குமாரபாளையத்தில் எலும்பு மூட்டு இலவச பரிசோதனை முகாம்: டி.எஸ்.பி., பங்கேற்பு
X

இலவச பரிசோதனை முகாமினை ஈரோடு டி.எஸ்.பி., சண்முகம் பங்கேற்று முகாமினை துவக்கி வைத்தார்.

குமாரபாளையத்தில் நடைபெற்ற எலும்பு மூட்டு இலவச பரிசோதனை முகாமில் டி.எஸ்.பி. பங்கேற்று துவக்கி வைத்தார்.

குமாரபாளையம், பவானி ரோட்டரி சங்கம், அர்னவ் ஆர்த்தோ கேர் மருத்துவமனை சார்பில் எலும்பு மூட்டு இலவச பரிசோதனை முகாம் குமாரபாளையத்தில் கே.ஒ.என். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற்றது. தலைவர் ஜீவா சித்தையன் தலைமை வகித்தார்.

ஈரோடு டி.எஸ்.பி. சண்முகம் பங்கேற்று முகாமினை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார். இதில் எலும்பு கணிம அடர்த்தி சோதனை, ரத்த சர்க்கரை அளவு, கால் மூட்டு மற்றும் தோள் பட்டை வலி, கழுத்து, முதுகு மற்றும் தண்டுவட வலி, மூட்டு தேய்மானம், ஜவ்வு பிரச்சனைகள், எலும்பு முறிவு, மூட்டு மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல சிகிச்சைகளுக்கு டாக்டர் நரேஷ் தனக்கோடி பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினார்.

இதில் 200க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று பயன் பெற்றனர். நிர்வாகிகள் ஞானபாலன், செல்வராஜூ, தண்டாயுதபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story