நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு

நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து கலை  நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு

வேளாண்மைத்துறை சார்பில் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து குமாரபாளையம் உழவர் சந்தையில் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேளாண்மைத்துறை சார்பில் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து குமாரபாளையத்தில் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேளாண்மைத்துறை சார்பில் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து குமாரபாளையத்தில் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குமாரபாளையம் உழவர் சந்தையில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்கு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயமணி தலைமை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் மாயஜோதி வாழ்த்தி பேசினார்.

அட்மா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விவசாய தொழில்நுட்ப உள் மாவட்ட, உள் மாநில, வெளி மாநில பயிற்சிகள், அனைத்து கண்டுணர் சுற்றுலா, விவசாயிகளுக்கு செயல் விளக்க திடல் அமைத்தல், பண்ணைப் பள்ளி மூலம், விதைத்தது முதல் அறுவடை வரை நடைபெறும் அனைத்து தொழில்நுட்ப தகவல்கள், வேளாண்மைத் துறையின் மானியத் திட்டங்கள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், நுண்ணீர் பாசனத்திட்டம், பயிர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் கவுரவ நிதித் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கி கூறப்பட்டது.

மேலும் தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத் துறை சார்ந்த மானியத்திட்டங்கள், உழவர் சந்தையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் கிருபா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரியங்கா, அருண்குமார் செய்திருந்தனர்.

Tags

Next Story