வியாபார நேரத்தில் வந்த மழையால் வியாபாரிகள் கலக்கம்

குமாரபாளையத்தில் பெய்த கன மழை
குமாரபாளையம் மட்டும் சுற்றுப்புற பகுதியில் இன்று காலை முதலே மழை மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் துணிக்கடை, நகைக்கடை, பேன்சி ஸ்டோர்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் காலை முதலே கூட்டம் அதிகம் காணப்பட்டது.
பெரும்பாலும் பொதுமக்கள் இரவு 07:00 மேல் மேற்சொன்ன கடைகள் மற்றும் இதர கடைகளுக்கு அதிகம் வருவது வழக்கம். இந்நிலையில் பெய்த கன மழை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அதிகம் வருவார்கள் என்று ஆவலுடன் அனைத்து வியாபாரிகளும் காத்திருந்த நிலையில் இந்த மழையால் அவர்களின் வியாபாரம் பெரிதும் பாதித்தது.
பல இடங்களில் பட்டாசு கடைகளும் போட்டிருந்தனர். அவர்களும் அவரசம், அவசரமாக பட்டாசுகளை எடுத்து வைக்கும் நிலை ஏற்பட்டது. சாலையில் மற்றும் கோம்பு பள்ளத்தில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu