ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு 5% சதவீதம் ஊக்கத்தொகை

ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு 5% சதவீதம் ஊக்கத்தொகை
ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு 5% சதவீதம் ஊக்கத்தொகை தமிழக அரசு அறிவித்துள்ளதாக , குமாரபாளையம் நகராட்சி சார்பில் பிளெக்ஸ் பேனர்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில், சொத்துவரி செலுத்துவது சம்பந்தமாக, பிளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
குமாரபாளையம் நகராட்சிக்கு 2025-..26ம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை, வருகிற ஏப். 30க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் நபர்களுக்கு 5% சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகவே, பொதுமக்கள் சொத்துவரியை உடனே செலுத்தி பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் https.tnurbanpay.tn.gov.in. என்ற இணைய தளம் வாயிலாகவும், நகராட்சி கணினி சேவை மையம், புதிய பேருந்து நிலையம் வரி வசூல் மையத்திலும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் குத்தகை தொகை செலுத்தலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படவிளக்கம் :
குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில், சொத்துவரி செலுத்துவது சம்பந்தமாக, பிளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu