உடல்தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு
படவிளக்கம் :
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் உடல்தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா அதன் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது
உடல்தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு -குமாரபாளையம் உடல்தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் உடல்தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா அதன் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்கள் அசோக்கிருஷ்ணா மருத்துவமனை டாக்டர் நடராஜன், அரசு மருத்துவ மனை தலைமை டாக்டர் பாரதி, மக்கள் நீதி மய்யம் மண்டல செயலர் காமராஜ், உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். டாக்டர் நடராஜன் பேசியதாவது: உடல்தானம் செய்ய முதலில் பெரிய மனசு வேண்டும். அதை அவரது குடும்பத்தினர்கள் சம்மதம் தர வேண்டும். இன்று 16 பேர் உடல்தானம் செய்துள்ளீர்கள். இது குமாரபாளையம் நகருக்கு பெருமை. இறந்த தானமாக கொடுக்கப்படும் உடல், யார் உடல் தானம் செய்தார்? என்பதை யாரும் அறிந்து விட கூடாது என்பதற்காக முதலில் தலைலை அகற்றி விடுவார்கள். மருத்துவ மாணவர்களுக்கு பாடம் நடத்த ஒவ்வொரு உறுப்பாக கட் செய்துதான் பாடட்ம் நடத்துவார்கள். இந்த நல்ல செயலை செய்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். உங்களை பார்த்து மற்றவர்களும் உடல் தானம் செய்ய முன் வருவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu