உடல்தானம் செய்த 17 நபர்களுக்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் பாராட்டு விழா!

உடல்தானம் செய்த 17 நபர்களுக்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் பாராட்டுவிழா
குமாரபாளையத்தில் உடல்தானம் செய்த 17 நபர்களுக்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் பாராட்டுவிழா நடந்தது.
குமாரபாளையத்தை சேர்ந்த 17 நபர்கள் 2024, டிச. 2ல் உடல் தானம் செய்தனர். நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் விண்ணப்பங்களை பதிவு செய்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிடம் சமர்பித்தனர். உடல்தானம் செய்ய முன்வந்த நபர்களுக்கு குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் பாராட்டு விழா நடந்தது. இதில் உடல் தானம் செய்தவர்களுக்கு சால்வை அணிவித்தும்,இனிப்புகள் வழங்கியும் மரியாதை செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அனைவரும் இன்ஸ்பெக்டருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.க்கள் குணசேகரன், ராம்குமார், வரதராஜ், பொன்னுசாமி, பழனிச்சாமி, பாசம் ஆதரவற்றோர் மைய நிர்வாகி குமார், விடியல் பிரகாஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் உடல்தானம் செய்த 17 நபர்களுக்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் பாராட்டுவிழா நடந்தது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu