சபரிமலையில் சேவை செய்தவர்களுக்கு பாராட்டு விழா

சபரிமலையில் சேவை செய்தவர்களுக்கு பாராட்டு விழா
X

சபரிமலையில் சேவை செய்தவர்களுக்கு அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா

சபரிமலையில் சேவை செய்தவர்களுக்கு குமாரபாளையத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் ஐம்பெரும் விழா மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்றது. இதில் வைகாசி மாத சபரிமலை அன்னதான நிகழ்வுக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு திருச்சி மாவட்ட செயலர் ஸ்ரீதர் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

சபரிமலையில் சேவை செய்த தொண்டர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி மாவட்ட செயலர் ஜெகதீஷ் பாராட்டினார். நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மாவட்ட கவுரவ தலைவர் நாராயணன் பாராட்டினார்.

கள்ளந்தேரி முதியோர் இல்லத்திற்கு இலவச வேட்டி, சேலைகளை மாவட்ட புரவலர் வேணுகோபால் வழங்கினார். சபரிமலையில் சிறப்பாக பணியாற்றிய யுவராஜ், சதீஷ், சிவக்குமார், சபாபதி, கார்த்தி ஆகிய 5 தொண்டர்களுக்கு மத்திய, மாநிலதுணை தலைவர் பாலசுப்ரமணி விருதுகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் செங்கோட்டையன், மாவட்ட துணை செயலர் அன்புக்கரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!