அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நியமனம்

அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நியமனம்
X

திருச்செங்கோட்டில் நடைபெற்ற நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்க ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள், சிறந்த சேவை செய்தவர்கள் கவுரவிக்கபபட்டனர்

திருச்செங்கோட்டில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் தேசிய புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் நியமனம், நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்செங்கோடு செங்குந்தர் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

நேற்று முன்தினம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தேசிய புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தனர். புதிய தலைவராக சென்னையை சேர்ந்த ஐயப்பன், பொதுச் செயலராக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வேலாயுத நாயர், பொருளாளராக மதுரையை சேர்ந்த விஸ்வநாதன், துணைத் தலைவர்கள் ஆறு பேர்கள், துணை செயலர்கள் ஆறு பேர்கள், சிறப்பு உறுப்பினர்கள் இருவர், செயற்குழு உறுப்பினர்கள் 25 பேர்கள் உள்ளிட்ட 42 பேர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்திலிருந்து மத்திய துணைத்தலைவராக பாலசுப்ரமணியம், மத்திய செயற்குழு உறுப்பினராக ஜெகதீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

நேற்று நடந்த நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்க ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரபு, மாவட்ட செயலர் ஜெகதீஸ் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய புதிய தலைவர் ஐயப்பன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகள், சிறந்த சேவை செய்தவர்கள் கவுரவிக்கபபட்டனர்.

பின்னர் புதிய தேசிய தலைவர் ஐயப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அகில பரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் பைலா படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கபடுவது வழக்கம். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஒன்று கூடி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர்.

புதிய தலைவர், 6 துணைத்தலைவர், ஒரு பொதுச் செயலாளர், 6 துணை செயலர்கள், ஒரு பொருளாளர், ஒரு செயலர், 25பேர் கொண்ட மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிர்வாகிகள் மூன்று ஆண்டுகளுக்கு பணியாற்றுவார்கள். கடந்த மாதம் ஐயப்ப பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் மீட்டிங் வைத்தார்கள். அதில் கேரளா அரசுக்கு அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ஆறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

சென்ற ஆண்டு யாரையும் பம்பையில் குளிக்க விடவில்லை. பம்பையில் பக்தர்களை குளிக்க விடணும் இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பில்லை. அதுக்கு சரி என தெரிவித்துள்ளனர். சுவாமிமார்களை இரவில் தங்க விடவேண்டும். பக்தர்கள் கொண்டு வரும் நெய் அபிஷேகத்திற்கு அனுமதி தரவேண்டும். இரண்டு தடுப்பூசி போட்ட 25 ஆயிரம் பேர் மட்டுமே மலை மேல் தங்க அனுமதி என்று கூறியுள்ளனர். இதனை மாற்றி இரண்டு தடுப்பூசி போட்டு சான்றிதழ் வைத்துள்ள அனைவரையும் சபரி மலை மேல் தங்க விடணும். சுவாமிமார்கள் கொண்டு செல்லும் நெய்யை சுவாமிக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என அவர் தெரிவித்தார்.

நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், செங்கோட்டையன், அன்புக்கரசு, மாதேஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story