குமாரபாளையத்தில் 27 மரங்கள் வெட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

குமாரபாளையத்தில்  27 மரங்கள் வெட்டிய   வழக்கில் மேலும் ஒருவர்  கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம் பைல் படம்

குமாரபாளையத்தில் அனுமதியின்றி 27 மரங்கள் வெட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சுற்றுச்சூழல் பாதுகாக்க அனைவரும் மரங்கள் வளர்க்க சொல்லி அரசு கூறி வருகிறது. இந்நிலையில் குமாரபாளையம் அருகே பூலக்காடு பகுதியில் 27 மரங்கள் வெட்டப்பட்டிருப்பது கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது பற்றி வி.ஏ.ஒ. முருகன் ,மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோரிடம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க, நேரில் வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் மரங்களை வெட்ட சொன்னது குமாரபாளையம் பஞ்சாபி தாபா ஓட்டல் கடை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, என்பது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் சொல்லி மரங்களை வெட்டிய கோட்டைமேடு பகுதியை சேர்ந்த மாரியப்பன், தலைமறைவாக இருந்தார். இவரையும் நேற்று போலீசார் கோட்டைமேடு பகுதியில் கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!