அனுமதியில்லாமல் கல்லறைகள் இடிப்பு கிறிஸ்தவ பெருமக்கள் கண்டனம்

அனுமதியில்லாமல் கல்லறைகள் இடிப்பு
கிறிஸ்தவ பெருமக்கள் கண்டனம்
குமாரபாளையம் அருகே அனுமதியில்லாமல் கல்லறைகள் இடித்ததால், கிறிஸ்தவ பெருமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட மயானம், சேலம், கோவை புறவழிச்சாலை அருகே உள்ளது. இந்த இடத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தார் பூச்செடிகள், மரங்கள் வைக்க இருப்பதால், மயானம் முழுதும், பொக்லின் கொண்டு நிலத்தை சமன் படுத்தி, மரக்கன்றுகள் வைக்க குழிகளும் தோண்டினர். மேலும் குளத்துக்காடு என்ற பகுதியில் உள்ள தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட மயானத்தில் கல்லறைகள் மீது குப்பைகள் மலை போல் குவித்து வைத்துள்ளனர். இதற்கு, நடராஜா நகர் ஜெபமாலை மாதா பேராலய பங்கு தந்தை பெலவெந்திரம், செயலர் இன்னாசிமுத்து, பொருளர் வின்சென்ட், கல்லறை பொறுப்பாளர் இருதயராஜ் ஆகியோர், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை செய்து, இரு தரப்பினரை சமாதானம் செய்து, கல்லறை இருந்த இடத்தில் குப்பை கொட்டக்கூடாது எனவும், கல்லறை இடிக்கப்பட்ட இடத்தில் எவ்வித பணிகளும் செய்யக்கூடாது எனவும் பேசி அனுப்பினர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் அருகே அனுமதியில்லாமல் கல்லறைகள் இடித்ததால், கிறிஸ்தவ பெருமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu