சேர்மன் நட்ட 7 மரக்கன்றுகளை பிடுங்கி எறிந்த சமூக விரோதிகள்

சேர்மன் நட்ட 7 மரக்கன்றுகளை  பிடுங்கி எறிந்த சமூக விரோதிகள்
X

குமாரபாளையம் 15வது வது வார்டு பகுதியில் சேர்மன் விஜய்கண்ணன் சுதந்திரதினவிழாவையொட்டி 25 மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

குமாரபாளையத்தில் சேர்மன் நட்ட 7 மரக்கன்றுகளை சமூக விரோதிகள் பிடுங்கி எறிந்தனர்

குமாரபாளையம் 15வது வது வார்டு பகுதியில் சேர்மன் விஜய்கண்ணன் சுதந்திரதினவிழாவையொட்டி 25 மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை அந்த வார்டு கவுன்சிலர் கோவிந்தராஜ் செய்திருந்தார். நேற்று காலை அதில் 7 மரக்கன்றுகள் மர்ம நபர்களால் பிடுங்கி எறியப்பட்டு இருந்தன.

இது பற்றி கவுன்சிலர் கோவிந்தராஜ் கூறியதாவது: மரக்கன்று நட்டு வைத்து சுற்று சூழலை பாதுகாக்க எண்ணி மரக்கன்றுகள் நட்டோம். ஆனால் இதை விரும்பாத சிலர் இதனை பிடுங்கி எறிந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்