குமாரபாளையத்தில் கராத்தே பயிற்சி மைய ஆண்டுவிழா

குமாரபாளையத்தில் கராத்தே பயிற்சி மைய ஆண்டுவிழா
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற கிரேட் இந்தியன் கராத்தே பயிற்சி மைய 25ஆவது ஆண்டுவிழாவில் சிறந்த மாணவ,மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையத்தில் கராத்தே பயிற்சி மைய 25ஆவது ஆண்டுவிழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் கராத்தே பயிற்சி மைய 25ஆவது ஆண்டுவிழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் கிரேட் இந்தியன் கராத்தே பயிற்சி மைய 25ஆவது ஆண்டுவிழா, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் குழுவில் சுதந்திர போராட்ட வீரர் பழனியின் மகனும், பயிற்சியாளருமான பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பாரதி, டாக்டர் சண்முகசுந்தரம், விடியல் பிரகாஷ், நலவாரியம் செல்வராஜ், தன்னார்வலர் ரம்யா, புத்தர் தெரு நகராட்சி பள்ளி ஆசிரியை கார்த்திகா உள்பட பலர் பங்கேற்று, பல்வேறு கராத்தே போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தி பேசினர். 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பதக்கங்களை பயிற்சியாளர் பன்னீர்செல்வம் வழங்கி கவுரவப்படுத்தினார். விழாவையொட்டி செல்வராஜ் மலர் வெளியிட, சிறப்பு விருந்தினர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர். மாணவ, மாணவியர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட பயிற்சிகளை செய்து காட்டினர்.

Tags

Next Story
கொடிவேரியில் பரிசல் சவாரிக்கு லைப் ஜாக்கெட் இனி கட்டாயம்..!