சிதிலமடைந்த சமுதாய நலக்கூடம்: சீரமைக்க அன்னை சத்யாநகர் மக்கள் கோரிக்கை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன; ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்
கடந்த 2003ஆம் ஆண்டு, இக்குடியிருப்புக்கு அருகில், புதிதாக ஆலாம்பாளையம் பேரூராட்சி சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இதனை, பொதுமக்கள் திருமணம் உள்ளிட்ட விசேஷ காரியங்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.
கடந்த சில வருடங்களாக, முறையான பராமரிப்பு இல்லாததால் பேரூராட்சி சமுதாய நலக்கூடம் சீரழிந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால், அரசின் நிதி வீணாக்குவதோடு, மக்களும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, சிதிலமடைந்து கிடக்கும் சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu