திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா

திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா
X

திமுக சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா நகர செயலர் செல்வம் தலைமையில் நடந்தது.

குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் திமுக சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா நகர செயலர் செல்வம் தலைமையில் நடந்தது. கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மாணிக்கம், முன்னாள் சேர்மன் ஜெகநாதன், தொழிலதிபர் ராஜாராம், துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ரங்கநாதன், சத்தியசீலன், தீபா, அம்பிகா, நிர்வாகிகள் ரவி, அன்பரசு, அன்பழகன், மீனாட்சிசுந்தரம், ராஜ்குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!