அங்கன்வாடி மையங்களில் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் ஆய்வு

அங்கன்வாடி மையங்களில் குமாரபாளையம் நகராட்சி சேர்மன்  ஆய்வு
X

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் அங்கன்வாடி மையங்களில் குறைகேட்டார்.

குமாரபாளையம் அங்கன்வாடி மையங்களில் நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.

குமாரபாளையம் காவேரி நகர் அங்கன்வாடி மைய நிர்வாகிகள் நகராட்சி சேர்மனிடம் தங்கள் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி நேரில் சென்ற நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகளிடம் கூறினார். இதையடுத்து நகராட்சியில் பல இடங்களில் கட்டப்பட்டு வரும் பொது கழிப்பிடங்களை ஆய்வு செய்தார். மேலும் தூய்மை பணிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு வீடாக வினியோகம் செய்தார். இதில் கமிஷனர் விஜயகுமார், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!