குமாரபாளையம் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் 28ம் ஆண்டு சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில்   28ம் ஆண்டு சிறப்பு வழிபாடு
X

சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன்.

குமாரபாளையத்தில் மகா சிவராத்திரியையொட்டி அங்காள பரமேஸ்வரியம்மன் 28ம் ஆண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சிவராத்திரியையொட்டி அங்காள பரமேஸ்வரியம்மன் 28ம் ஆண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவராத்திரியையொட்டி குமாரபாளையத்தில் அனைத்து சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

அங்காள பரமேஸ்வரியம்மன் 28ம் ஆண்டு சிறப்பு வழிபாடு தேவாங்க குல, குடிகேலாரு வம்ச பெருமக்கள் சார்பில் மார்ச் 1ல் இடைப்பாடி சாலை தனியார் மண்டபத்தின் முன்பு முகூர்த்தக்கால் நடுதல், மஞ்சள் குங்குமம் வாங்குதல், பூசாரி வீட்டார் அழைத்தல், சின்னப்பநாயக்கன்பாளையம் கோவிலிலிருந்து உற்சவமூர்த்தி அம்மனை அழைத்து வருதல், காவிரியிலிருந்து தீர்தக்குடங்கள் எடுத்து வருதல், ஆகியன நடைபெற்றன.

நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், கோ பூஜை, லட்சுமி, கணபதி, ஆதித்யாதி நவகிரக ஹோமம், கலசாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்கார மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare