குமாரபாளையத்தில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்

குமாரபாளையத்தில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்
X

குமாரபாளையத்தில் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் ஆண்டாள் திருகல்யாண வைபவம் நடைபெற்றது.

குமாரபாளையம், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

குமாரபாளையம், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இதில், கூடாரவல்லி உற்சவம், கொடியேற்றம், பஜனை திருவீதி உலா, பரமபத வாசல் திறப்பு ஆகிய வைபவங்கள் நடைபெற்றன.

இதன் ஒருபகுதியாக, பாண்டுரங்கர் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில், சிறுமி ஒருவருக்கு ஆண்டாள் வேடம் போடப்பட்டு, அலங்காரம் செய்து, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டன. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story