குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி விழுந்து மரணம்

குமாரபாளையம்  பஸ் ஸ்டாண்டில் அடையாளம் தெரியாத முதியவர்  மயங்கி  விழுந்து மரணம்
X
குமாரபாளையத்தில் 55 வயதான அடையாளம் தெரியாத முதியவர் பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் பஸ்ஸ்டாண்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் 55 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி விழுந்தார் என நேற்று இரவு 10:30 மணியளவில் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று கேட்ட போது, தன் பெயர் சுப்ரமணி வயது 60 என்று கூறினார். ஆனால் முகவரியை தெரிவிக்கவில்லையாம். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவரது சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் குமாரபாளையம் காவல்நிலையத்தை செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் 9498101046என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது