குமாரபாளையம் அருகே மின் கம்ப பீங்கான் உடைந்து விழுந்து மூதாட்டி காயம்

குமாரபாளையம் அருகே மின் கம்ப பீங்கான் உடைந்து விழுந்து மூதாட்டி காயம்
X
குமாரபாளையம் அருகே மின் கம்பத்தில் தீப்பிடித்து பீங்கான் உடைந்து மூதாட்டியின் தலை மேல் விழுந்ததில் மூதாட்டி காயம்.

குமாரபாளையம் அருகே மின் கம்பத்தில் தீப்பிடித்து பீங்கான் உடைந்து மூதாட்டியின் தலை மேல் விழுந்ததில் மூதாட்டி ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, உப்புக்குளம், காட்டுவளவு பகுதியில் வசித்து வருபவர் கருப்பாயி, 70. இவரது பேத்தி யோகானந்தி, அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் என்பவருக்கும் பிப். 7ல் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான திருமண பணிகளை கருப்பாயி கவனித்து வந்தார்.

நேற்று மாலை 06:00 மணியளவில் வீட்டின் அருகே உள்ள மின் கம்பத்தின் கீழே நின்று கொண்டிருக்க, திடீரென்று மின் கம்பத்தின் மின் கம்பிகள் தீப்பிடித்து, அதில் இருந்த பீங்கான் ஒன்று உடைந்து கருப்பாயி தலையில் விழுந்தது. இதனால் மயக்கமடைந்த இவரை, சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!