போலீசார் சார்பில் போதை பொருட்கள், நிதி நிறுவன அத்துமீறல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
படவிளக்கம் :
குமாரபாளையம் போலீசார் சார்பில் போதை பொருட்கள், நிதி நிறுவன அத்துமீறல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நடந்தது
போலீசார் சார்பில் போதை பொருட்கள், நிதி நிறுவன அத்துமீறல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
குமாரபாளையம் போலீசார் சார்பில் போதை பொருட்கள், நிதி நிறுவன அத்துமீறல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையம் போலீசார் சார்பில் போதை பொருட்கள், நிதி நிறுவன அத்துமீறல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நடந்தது.
குமாரபாளையம் பகுதியில் பல நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய பொதுமக்கள், அதனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளுதல், தற்கொலைக்கு முயற்சி செய்தல், உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என, காந்தி தெரு பகுதியில் உள்ள ஏழை தொழிலாள பொதுமக்களிடம் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தைரியம் கூறினார். இவர் பேசியதாவது :
குடும்ப சூழ்நிலைக்கு கடன் வாங்கிய நீங்கள், உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போகும் நிலை பலருக்கும் உருவாகிறது. இதற்காக தற்கொலை என்பது தீர்வு ஆகாது. நிதி நிறுவன அதிகாரிகள் உங்களை வந்து கேட்டால், போலீஸ் ஸ்டேஷன் வந்து எங்களிடம் கூறுங்கள். அவர்களிடம் பேசி சுமுக தீர்வு காணலாம். அதற்காக தவறான முடிவுக்கு போக வேண்டாம். உங்கள் பிள்ளைகள் வேலைக்கு செல்லும் போது, அங்கு சில கடைகளில் புகையிலை பொருட்கள் வாங்கி உண்ணும் பழக்கத்திற்கு ஆளாகலாம். அது போல் ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள்.அப்படி யாராவது புகையிலை பொருட்கள் விற்றால் எங்களுக்கு தெரிவியுங்கள். உடனடி நடவடிக்கை மேற்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பொதுமக்களிடம் பேசினார்.
ஆண்களும், பெண்களும் பெருமளவில் பங்கேற்று இன்ஸ்பெகடர் கூறியதை கேட்டு, இனி உங்கள் சொற்படி நடந்து கொள்கிறோம், என உறுதி கூறினார்கள்.
இதில் எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.க்கள் குணசேகரன், மாதேஸ்வரன், ராம்குமார், பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu