குமாரபாளையத்தில் சாலை அமைக்க உதவியவர்களுக்கு அம்மன் நகர் நலசங்கம் பாராட்டு

குமாரபாளையத்தில் சாலை அமைக்க உதவியவர்களுக்கு அம்மன் நகர் நலசங்கம் பாராட்டு
X

குமாரபாளையம் அம்மன் நகரில் புதிய சாலை அமைக்க உதவிய தி.மு.க. நகர செயலாளர் செல்வம், நகராட்சி துணை சேர்மன் வெங்கடேசன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தப்பட்டது. 

குமாரபாளையம் அம்மன் நகர் நலசங்கம் சார்பில் சாலை அமைக்க உதவியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குமாரபாளையம் அம்மன் நகர் சாலை ஆக்கிரமிப்பு இருந்ததால் அதனை பல வருட நீதிமன்ற போராட்டத்திற்கு பிறகு ஆக்கிரமிப்புகள் அனைத்தும் சில மாதங்கள் முன்பு அகற்றப்பட்டது. இப்பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருப்பதால் வாகன போக்குவரத்து அதிகம் இருந்து வந்தது. சாலை சேதத்தால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகும் நிலை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வாக சாலை அமைக்கும் பணிக்காக நகராட்சி பொறியாளர் தயாரித்து வைத்த ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பிலான திட்ட வரையறையை, தி.மு.க. நகர செயலர் செல்வம், நகராட்சி துணை சேர்மன் வெங்கடேசன் ஆகியோர் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவிடம் கொடுத்து உதவிட கேட்டனர். இதனை பரிசீலித்த அமைச்சர் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையாவிடம் பரிந்துரை செய்து, நிதி ஒதுக்கீடு செய்ய ஆணையிட்டார். இதற்காக அம்மன் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் செல்வம் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்