குமாரபாளையத்தில் அம்மா உணவகம், காவிரி கரைப்பகுதியை ஆய்வு செய்த சேர்மன்

குமாரபாளையத்தில் அம்மா உணவகம், காவிரி கரைப்பகுதியை ஆய்வு செய்த சேர்மன்
X

குமாரபாளையம் அம்மா உணவகத்தில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையத்தில் அம்மா உணவகம், காவிரி கரைப்பகுதிகளை நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையத்தில் அம்மா உணவகம், காவிரி கரைப்பகுதிகளை நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி சேர்மனாக பொறுப்பேற்ற விஜய்கண்ணன் தினமும் ஒவ்வொரு பகுதியாக சென்று கள ஆய்வு செய்து வருகிறார். அந்த பகுதியில் என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். அவ்வகையில் நேற்று அம்மா உணவகம் சென்று, அங்கு தயாரிக்கப்பட்ட உணவினை உண்டு ஆய்வு செய்தார்.

மேலும் அங்குள்ள பணியாளர்களிடம் குறைகள் கேட்டறிந்தார். மேலும் கலைமகள் வீதி காவிரி கரையோர பகுதிகள் ஆய்வு செய்தார். அங்குள்ள மயானத்திற்கு சுற்றுசுவர் அமைக்க அப்பகுதி கவுன்சிலர் கோவிந்தராஜன் கேட்டுக் கொண்டார். நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறித்தினார். இதில் துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai marketing future