லயன்ஸ் சங்க விழாவில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு

லயன்ஸ் சங்க விழாவில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு
X

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்க விழாவில் நேஷனல் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்க விழாவில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்க விழாவில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடந்தது. புதிய பொறுப்பாளர்களான தலைவர் கதிர்வேல், செயலர்கள் கோகுல்நாத், சிவராமன், பொருளர் செல்வராஜ் உள்ளிட்டவர்களுக்கு முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் அரவிந்தராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கல்வி உதவித்தொகை 5 ஆயிரம், அரசு பள்ளிக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், பாசம் ஆதரவற்றோர் மையத்திற்கு அரிசி மூட்டைகள் ஆகியன வழங்கப்பட்டன. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் சரியில்லாமல் நடமாட முடியாத நிலையில் உள்ளவர்கள் என பலதரப்பட்ட 127 நபர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து சென்று, ஓட்டுப்பதிவு செய்து, பின் மீண்டும் அவரவர் வீடுகளில் விட்டு இலவச சேவை செய்த நேஷனல் ஆம்புலன்ஸ் உரிமையாளர் பிரகாஷ் மற்றும் ஓட்டுனர்கள் யஸ்வந்த், கவுதம் உள்ளிட்ட 11 நபர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி கவுரவப்படுத்தபட்டனர்.

சிறப்பு விருந்தினர்கள் கூட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் சந்திரசேகர், மோகன், குமரேசன், தமிழ்மணி உள்ளிட்ட பலர் சங்கத்தின் சேவைப்பணிகளையும், நேஷனல் அம்புலன்ஸ் ஒட்டுனர்கள் சேவையையும் பாராட்டினர். சங்கம் சார்பில் ஒரு ஆண்டிற்கான மாவட்ட சந்தா, பன்னாட்டு சந்தா வழங்கப்பட்டன.

நடப்பு ஆண்டில் செயல்படுத்தக்கூடிய சேவைப்பணிகள் குறித்து மாவட்ட உணவு வழங்கல் துறை நிர்வாகி சண்முகசுந்தரம் கூறினார். கிராமப்புற இளைஞர்கள் பயிற்சி பெறும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் மாதேஸ்வரன், மனோகரன், ரமேஷ் சந்திரா மணிமாலா உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு