குமாரபாளையத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
X

குமாரபாளையம் நாராயண நகர் பகுதி இல்லம் தேடி கல்வித்திட்ட மையத்தில் சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் நாராயண நகர் பகுதி இல்லம் தேடி கல்வித்திட்ட மையத்தில் சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக, அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலைமையாசியர் பாரதி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் புத்தகங்களை வழங்கி பாராட்டினார்கள். மாணவ, மாணவியர்களுக்கு முக கவசங்கள் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!