அம்பேத்கர் பிறந்த நாள் விழா: நகராட்சி சேர்மன் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் பிறந்த நாள் விழா: நகராட்சி சேர்மன் மாலை அணிவித்து மரியாதை
X

குமாரபாளையம் அம்பேத்கார் பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு சேர்மன் விஜய்கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

குமாரபாளையத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு சேர்மன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அம்பேத்கார் திருவுருவச்சிலைக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி, சியாமளா, நந்தினிதேவி, வேல்முருகன், ஜேம்ஸ், கோவிந்தராஜ் நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் 50 நபர்களுக்கு கேக், தேநீர் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!