குமாரபாளையம் அரசு பள்ளியில் 6 வகுப்பறைகளை புதுப்பித்த முன்னாள் மாணவர்கள்

குமாரபாளையம் அரசு பள்ளியில் 6 வகுப்பறைகளை புதுப்பித்த முன்னாள் மாணவர்கள்

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் 6 வகுப்பறைகளை புதுப்பித்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் 6 வகுப்பறைகளை புதுப்பித்தனர்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் 6 வகுப்பறைகளை புதுப்பித்தனர்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற வகுப்பறைகள் போதுமானதாக இல்லாமல் இருந்தது. இந்நிலையில் 6 வகுப்பறைகள் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனை புதுப்பிக்க 4 லட்சம் ரூபாய் ஆகும் என கூறப்பட்டது. இது குறித்து தகவலறிந்த 1987ம் ஆண்டில் இதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், தங்கள் பொறுப்பில் இதனை புதுப்பித்து தருவதாக கூறினர்.

மேற்படி மாணவர்கள் இந்த செலவை தங்கள் பொறுப்பில் ஏற்று, சேதமான வகுப்பறை கட்டிடங்களை புதுப்பித்து கொடுத்தனர். இதனை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தலைமையாசிரியர் ஆடலரசு தலைமையில் நடந்தது. முன்னாள் மாணவர்கள் பங்கேற்று, புதுப்பித்த வகுப்பறைகளை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். தலைமையாசிரியர் ஆடலரசு வகுப்பறைகளை திறந்து வைத்தார். பி.டி.ஏ நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story