த.வெ.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

த.வெ.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
X
குமாரபாளையத்தில் மாற்றுக்கட்சியினர் த.வெ.க.வில் இணைந்தனர்.

த.வெ.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர் - குமாரபாளையத்தில் மாற்றுக்கட்சியினர் த.வெ.க.வில் இணைந்தனர்.

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த குமாரபாளையம் தொகுதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை கவுரவிக்கும் விழா, மாற்றுக்கட்சியினர் த.வெ.க. கட்சியில் இணையும் விழா குமாரபாளையத்தில் நகர செயலர் சக்திவேல் தலைமையில் நடந்தது. மாநாடு வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பல்வேறு கட்சியிலிருந்து த.வெ.க. கட்சியில் இணைந்த 157 நபர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முன்னதாக உறுப்பினர் சேர்க்கை மாநில செயலர் விஜயலட்சுமி, கட்சிக்கொடியினை ஏற்றி வைத்தார். நகர செயலர் சக்திவேல் பேசியதாவது:

கட்சியின் தலைவர் கை காட்டும் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து சொல்லி, பிரச்சாரம் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் அனைவரும் பங்கேற்று, வாக்காளர் பெயர்கள் விடுபடாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வார்டிலும், அந்தந்த பகுதி நிர்வாகிகள் தினமும் பொதுமக்களை சந்தித்து, தமிழக வெற்றிக்கழக வெற்றிக்கு பாடுபட வேண்டும். அதிக உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஒன்றிய தலைவர் நடராஜ், பொருளர் மோகன்ராஜ், நிர்வாகிகள் மகாபிரபு, சரவணன், பாலாஜி, வக்கீல் வினோத் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!