விவசாயிகள் நிலம் பறிமுதல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம்

விவசாயிகள் நிலம் பறிமுதல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது.
குமாரபாளையம் அனைத்து கட்சிகள், சமூக நல அமைப்புகள், தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
எலந்தகுட்டை, சின்னார்பாளையம் பகுதியில் 90 ஆண்டுகளாக குடியிருந்து வந்தவர்களை குடியிருப்பில் இருந்து வெளியேற்றி வருவதை கண்டித்து இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், 3 தலைமுறைகளாக அனுபவித்து வந்தவர்களுக்கே அந்த நிலத்தை வழங்கிட வேண்டி, முதற்கட்டமாக கூடமைப்பின் சார்பில், தாசில்தார், மாவட்ட கலெக்டர், அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து, மனு கொடுக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பெருமாள், காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் ஜானகிராமன், சுப்பிரமணியம், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர் காமராஜ், நகர மகளிரணி செயலர் சித்ரா, தி.மு.க. சார்பில் கவுன்சிலர் ரங்கநாதன், ரவி, உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu