குமாரபாளையத்தில் ஆல்பம் பாடல் இசை வெளியீடு!

குமாரபாளையத்தில் ஆல்பம் பாடல் இசை வெளியீடு!
X

குமாரபாளையத்தில் ஆல்பம் பாடல் இசை வெளியீடு நடந்தது.

குமாரபாளையத்தில் ஆல்பம் பாடல் இசை வெளியீடு நடந்தது.

குமாரபாளையத்தில் ஆல்பம் பாடல் இசை வெளியீடு நடந்தது.

குமாரபாளையம் நகரில் விசைத்தறி, கைத்தறி ஜவுளி உற்பத்தி அதிக அளவில் நடந்து வருகிறது. இதையடுத்து ஸ்பின்னிங் மில்கள், 2 தானியங்கி விசைத்தறி பூங்காக்கள் அமைக்கப்பட்டன. மேலும் அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல், பி.டி.எஸ்., பார்மசி, பி.ஓ.டி. பாரா மெடிக்கல் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்பட அதிக அளவிலான பள்ளிகளும் உருவாக்கப்பட்டன. இதன் அடுத்த கட்டமாக ஒலிப்பதிவு கூடங்கள் அமைக்கப்பட்டு, சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு போட்டி போடும் அளவில் பாடல்கள் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

அரவிந்த் பிலிம் பேக்டரி சார்பில், யோகா மாஸ்டர் அரவிந்த் தயாரிப்பில் பாடல் ஆல்பம், குமாரபாளையம் என்.கே. ஸ்டுடியோவில் உருவானது. இதன் இசை வெளியீட்டு விழா நேற்று தயாரிப்பாளர் அரவிந்த் தலைமையில் நடந்தது. அவ பார்த்தா, விழுந்தேன்.. என தொடங்கும் இந்த வீடியோ பாடலுக்கு குமாரபாளையம் இசை அமைப்பாளர் மணி கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார்.

பாடலை இதே ஊரை சேர்த்த ருத்ரன் நாகராஜ் எழுதியுள்ளார். இந்த ஆல்பம் படக்காட்சியினை அந்தியூர் அருகே அத்தாணி லோகேஷ் இயக்கியுள்ளார். பாடலை தனியார் டி.வி. சூப்பர் சிங்கர் ராஜகணபதி பாடியுள்ளார். ஒளிப்பதிவை அந்தியூர் தீபக் பிரசன்னா செய்துள்ளார். குமாரபாளையத்தை சேர்ந்த சந்தோஷ், கதாநாயகனாகவும், கதாநாயகியாக தனியார் தொலைக்காட்சி நக்லைட் நிகழ்ச்சி சிந்து நடித்துள்ளனர். பொதுமக்களில் ஒருவர் இந்த பாடலை வெளியிட, குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!