அலமேடு பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு

அலமேடு பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு
X

பள்ளிபாளையம் அருகே அலமேடு ஊராட்சி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்.

பள்ளிபாளையம் அருகே பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பள்ளிபாளையம் அருகே அலமேடு ஊராட்சி நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

வட்டார மேற்பார்வையாளர் மலர்விழி பங்கேற்று புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து பதவியில் அமர்த்தினார். புதிய தலைவராக ரேவதி, துணை தலைவராக வசந்தராஜ், மேலான்மைக்குழு உறுப்பினர்களாக ஊராட்சி தலைவர் சகுந்தலா, ஊராட்சி உறுப்பினர் சதீஷ்தனகோபால் உள்ளிட்ட 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதில் பி.டி.ஏ. நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
future ai robot technology