குமாரபாளயத்தில் மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யூ,சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

பாரத் பந்த் முன்னிட்டு குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் சாலை மறியல் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பொது துறைகளை தனியாருக்கு தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும். பெகசாஸ் உளவு செயலி பயன்படுத்தப்பட்டது குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்.
தொழிலாளர் சட்டங்களை நான்காக சுருக்கியத்தை கைவிட வேண்டும். தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் உள்ள முறைகேடுகளை போக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன் வைத்து நாடு முழுதும் பாரத் பந்த் நடைபெற்றது.
இதனையொட்டி குமாரபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஏ.ஐ.டி.யூ,சி. சார்பில் மாவட்ட செயலர் பாலசுப்ரமணி தலைமையில் ஸ்டேட் வங்கி எதிரில் மற்றும் பள்ளிபாளையம் பிரிவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஐ.என்.டி.யூ.சி. ஜானகிராமன், மக்கள் நீதி மய்யம் சரவணன், சித்ரா, உஷா, ஏ.ஐ.டி.யூ.சி. நஞ்சப்பன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. சுப்பிரமணி, சி.ஐ.டி.யூ. சண்முகம், எச்.எம்.எஸ். செல்வராஜ், எல்.டி.யூ.சி. சரவணன், எல்.பி.எப். அருள் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கல்லங்காட்டுவலசு பகுதியில் நடைபெற்ற சாலை மறியலில் படைவீடு பெருமாள் தலைமை வகித்தார். இந்த போராட்டங்களில் 179 பேர் கைது செய்யப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu